New Life To You

உங்களுக்கு புதுவாழ்வு வேண்டுமா?

பிரியமானவர்களே!
கடவுளைத் தேடி அலைந்து சோர்ந்து விட்டீர்களா?
உங்கள் வாழ்வில் ஆசீர்வாதமும் நன்மையும் குறைவுபட்டுள்ளதா?
கவலைப்படாதிருங்கள்!
உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும்
உங்களுக்கு ஒரு புதுவாழ்வு உண்டு!
உங்களுக்கு நல்லதோர் எதிர்காலம் உண்டு!
ஆசீர்வாதமான, மகிழ்ச்சியான நாட்களைக் காண்பீர்கள்!

களைத்து விட்டீர்களா ?

நீங்கள் நோய்வாய்ப்பட்டு, கடவுளைத் தேடுவதால் என்ன பிரயோஜனம் என சோர்ந்து போய் இருக்கிறீர்களா?

ஆசீர்வாத குறைவுகளா?

உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு ஆசீர்வாதமும் நன்மையும் இல்லாமல் இருக்கிறீர்களா?

நம்பிக்கையை இழந்துபோனீர்களா?

நம்பிக்கை இழந்த சூழ்நிலையா?கவலைப்பட வேண்டாம். நிச்சயம் உங்கள் சூழ்நிலை மாறும்.

உங்களுக்கு தீர்வு வேண்டுமா ?

உங்கள் பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கு தீர்வு உண்டு. 

உண்மை சாட்சிகள்

பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பது எப்படி?

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5:18

தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

ஆசீர்வாதமாயிருக்க விரும்புகிறீர்களா?

நாம் வாழ்வது ஓர் சுயநலமான உலகம்,
எனினும் தேவன் தம் பிள்ளைகளை பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறார். ஆசீர்வாதமாக இருப்பது என்பது நாம் விரும்புகிறவர்கள், நம்மை நேசிக்கிறவர்கள் அல்லது நமக்கு நன்மை செய்கிறவர்களுக்கு மட்டுமல்ல, நம்மை வெறுக்கிறவர்கள், ஏற்றுக்கொள்கிறவர்கள் மற்றும் நமக்கு தீங்கிழைத்தவர்களையும் உள்ளடக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்” (லூக்கா 6:27) என்று கட்டளையிட்டிருக்கிறார்.

“உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே” (லூக்கா 6:32) என்றும் கூறியிருக்கிறார்.

Scroll to Top