New Life To You

வியாபாரத்தில் வெற்றி!

Hello நண்பரே, நீங்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறவரா? ‘கடன்!’, ‘G.S.T., வரி!’, ‘விலைவாசி ஏற்றம்!’ போன்ற சவால்களை உங்களால் சமாளிக்க முடியவில்லையா? வியாபாரத்தில் உங்களால் முன்னேற முடியவில்லையா? உங்கள் வருமானத்தை விட, செலவுகள் அதிகமாக இருக்கிறதா? உங்கள் வாழ்க்கையில், தொழிலில், அல்லது வேலையில் தொடர்ந்து நீங்கள் தோல்வியையே சந்தித்து வருகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்… இன்றுமுதல், உங்கள் தோல்வி வெற்றியாக மாறப் போகிறது! நீங்கள் இன்றே ஜெயிக்கத் தொடங்கி வீட்டீர்கள்! நீங்கள் ஒரு வெற்றியாளர்! “அது எப்படி?” என்றுதானே சிந்திக்கிறீர்கள்? நீங்கள் இந்த நாளை துவங்கியதே, ஒரு பெரிய வெற்றிதான்! ஏனென்றால், நேற்று இருந்த பலர் இன்றைக்கு உயிரோடு இல்லை! இதுதான் உண்மை!

ஆனால் நீங்கள் இந்த நாளை வெற்றிகரமாகத் துவங்கி, வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களே! நீங்கள்தான் இன்றைய வெற்றியாளர்! “வாழ்க்கையிலும், தொழிலிலும் வெற்றி பெற்று உயர வேண்டும்!” என்கிற ஆசையும், விருப்பமும் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில், “தவறுதலாக எதையாவது செய்து தோற்றுப் போய் விடுவோமோ?” என்கிற ஒரு பயம் உங்கள் கனவை உடைத்து விடுகிறது அல்லவா? பயப்பட வேண்டாம்! உங்களைப் போன்ற ஒருவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றி தொடர்ந்து வாசியுங்கள். “நமஸ்தே ஜீ! என் பெயர் அமர். நான் ஒரு மார்வாடிக் குடும்பத்தைச் சார்ந்தவன். என் தகப்பனார் ஒரு திரைப்பட இயக்குனர். நான் ஒரு கோடீஸ்வரனாகத்தான் பிறந்தேன். சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்த என் வாழ்க்கையில், திடீரென்று நடைபெற்ற ஒரு சம்பவம் என் வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது.

அது என்னவென்றால், என் தகப்பனார் ஒரு கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தார்! அவர் இல்லாத காரணத்தினால், அவருடைய நண்பர் ஒருவர் எங்களுக்கு உதவி செய்வதாகக் கூறி, எங்களை ஏமாற்றி விட்டார். அதன் நிமித்தமாக, என் குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரமே கேள்விக்குறியாயிற்று. வீட்டிலிருந்த எல்லாவற்றையும் விற்று, ஒரு வருடத்தை கடத்தினோம்.
கடைசியில் நடுத் தெருவிற்கு வர வேண்டிய நிலைமை வந்தது. என் தாயாரும், தம்பியும் வீட்டு வேலை செய்யத் தொடங்கி விட்டார்கள். என் அண்ணன் ஒரு ‘டீ’ கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் நானோ, ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டேன். இந்நிலையில், ஒரு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்தேன்! மூடை தூக்கினேன்! கைகளால் கழிவறைகளை சுத்தம் செய்தேன்!

ஆனால், என் வாழ்க்கையில் எந்த விதமான ஒரு முன்னேற்றமோ, செழிப்போ இல்லை! என் உள்ளத்தில் ஒரு சந்தோஷமோ, சமாதானமோ இல்லை. “எந்தவொரு வேலையை விரும்பிச் செய்தாலும், முன்னேற முடியவில்லையே!” என்கிற ஒரு கவலையும், வெறுமையும், துக்கமும் என்னை வாட்டி வதைத்தது. அதன் பிறகு, ஒரு இடத்தில் தினமும் காலை 6 மணிமுதல், இரவு 11 மணிவரை வாட்ச்மேனாக வேலை பார்க்கத் தொடங்கினேன். அதில் வந்த 30 ரூபாய் டிப்சை வைத்து, என் தாயாருக்கும், தம்பிக்கும் இரவு உணவு வாங்கிக் கொடுப்பேன். எங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றமே இல்லாதபடியினால், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். அந்த சமயத்தில் என் நண்பர் ஒருவரிடத்தில், “என் கஷ்டம் தீராதா? நான் வாழ்க்கையில் முன்னேறவே முடியாதா?” என்று சொல்லி புலம்பினேன். அப்போது அவர் என்னிடத்தில், “ஒருமுறை என்னோடு கூட கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வா.” என்று சொல்லி, என்னை அழைத்தார்.

நான் அங்கு போயிருந்த சமயத்தில்தான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காகத்தான் மரித்து உயிர்த்தெழுந்தார் என்பதை அறிந்து கொண்டேன். அதுவரை என் வாழ்க்கையில் கண்டிராத ஒரு சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அன்றைக்குத்தான் முதன்முதலாக நான் பெற்றுக் கொண்டேன். என் வாழ்க்கை அப்படியே மாறத் தொடங்கியது. “நாம் செய்கிற சின்னச் சின்னக் காரியத்தில் கூட உண்மையாக இருக்க வேண்டும்.” என்கிற அனேக நல்ல காரியங்களை இயேசு கிறிஸ்து எனக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
நான் அதன் பிறகு ஆட்டோ ஓட்டுவதற்குத் தொடங்கி, அதில் உண்மையாக இருக்க முயன்றேன். வாடிக்கையாளர்களிடத்தில் மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட அதிகமாக வாங்க மாட்டேன். நான் செய்கிற எல்லாக் காரியங்களிலும் உண்மையாக இருந்தேன். இப்படியாக நான்கு ஆண்டுகள் உருண்டோடியது.
அதன் பிறகு, ஒரு நிறுவனத்தில் லோடு ஆட்டோ (Load Auto) ஓட்டும் வேலைக்குச் சேர்ந்தேன். நான் அதில் உண்மையாக

இருப்பதைப் பார்த்து, அதே நிறுவனத்தில் விற்பனை நிர்வாகியாக (Sales Executive) எனக்கு வேலை கொடுத்தார்கள். அதன் பிறகு, அதே நிறுவனத்தில் விற்பனை மேலாளராக (Sales Manager) எனக்கு வேலை உயர்வு கிடைத்தது. நான் வெறும் 6ம் வகுப்புத்தான் படித்திருக்கிறேன். ஆனால், தற்போது எனக்குக் கீழ் சுமார் 20 பேர் வேலை செய்கிறார்கள். இப்படியாக இயேசு கிறிஸ்து என்னை படிப்படியாக உயர்த்தினார்!” நண்பரே, அமரின் வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்ததைப்போல, இன்றைக்கு உங்கள் வாழ்க்கையிலும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருக்கலாம்!

அல்லது பில்லி-சூனியம் போன்ற மந்திரவாதக் கிரியைகளினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்! அல்லது உங்களோடு கூட தொழில் செய்து கொண்டிருக்கிறவர்களால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருக்கலாம்! அல்லது, “கடையையே மூடி விடலாம்!” அல்லது, வாழ்க்கையே வெறுத்துப் போய், “தற்கொலை செய்து செத்துப் போய் விடலாம்!” என்று கூட நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்!
நீங்கள் இன்றைக்கு எப்படிப்பட்ட மோசமான நிலைமையில் இருந்தாலும் பரவாயில்லை. பயப்படாதீர்கள்! திடன் கொள்ளுங்கள்!
ஏனென்றால், நிச்சயமாகவே உங்கள் பிரச்சனைக்கு முடிவு உண்டு! உங்கள் நம்பிக்கை வீண் போகாது! (நீதி. 23:18).
“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.” ஏசாயா 55:8.
எனவே கடையை மூடுவதோ, அல்லது தற்கொலை செய்து கொள்வதோ, நிச்சயமாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வாகாது.

இதோ, உங்களுக்கு ஒரு நற்செய்தி! அமரின் வாழ்க்கையை மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையையும் வெற்றியானதாக மாற்றவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காத்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கான சில டிப்ஸ்!

  1. “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;” (நீதி. 28:20) என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
    ஆகவே, உங்கள் தொழிலில் மற்றவர்களை ஏமாற்றி, ‘குறுக்கு வழியில் உயர்ந்து விடலாம்!’ என்று நினைக்காமல், நீங்கள் செய்யும் எந்தவொரு சிறிய காரியத்திலும் ஆசீர்வாதங்களை பெற, மேற்கண்ட வேத வசனத்தின்படி உண்மையாக இருங்கள்.
  2. உங்கள் வியாபாரத்தின் மூலமாக வருகிற வருமானத்தில் 40 சதவீத லாபத்தை தனியாக எடுத்து வையுங்கள். அந்த லாபத்தில் பாதியை உங்கள் குடும்பத்திற்கென்றும், மீதியை உங்கள் தொழிலுக்கென்றும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. அன்றாடம் வருகிற உங்கள் வருமானத்தை, அன்றைக்கே வங்கியில் (Bank) போட்டு விடுங்கள்.
  4. கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
  5. உங்கள் உடல் நலத்தை நீங்கள் பாதுகாப்பதும் மிக மிக முக்கியம்.
  6. வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து செயல்படுங்கள்.
  7. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்படியான புதிய புதிய காரியங்களைச் செய்யலாம்.
  8. தினமும் காலையில் உங்கள் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக, “இயேசுவே, இந்த நாளில் வியாபாரம் நன்றாக நடக்க உதவி செய்யுங்கள்.” என்று சொல்லி கேளுங்கள். அவர் நிச்சயமாக உங்களுக்கு உதவி செய்வார்.
    உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர, ஒரே ஒரு நிமிடம் இயேசுவினிடத்தில், “ஆண்டவரே, என் உள்ளத்தில் வாரும். என் பிரச்சனைகளை மாற்றும். நான் உம்மை முழுமையாக நம்புகிறேன்!’ என்று சொல்லுங்கள். அவர் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாகவே ஆசீர்வதித்து, உயர்த்துவார்!
    கர்த்தராகிய இந்த இயேசுவைப் பற்றி இன்னும் அதிகமாக நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் அருகிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குச் செல்லுங்கள்.

English
Scroll to Top