இனிய ஆரம்பம்
என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை!
எனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை!
எனக்கு தோல்விகள்! பயங்கள்!
சூழ்நிலைகள் எனக்கு எதிராக இருக்கிறது!
எனக்கு வியாதிகள்! கடன் தொல்லைகள்!
ஏன்?
ஏன்?
ஏன்?
நமது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பிரதானமான காரணங்களில் ஒன்று, நாம் செய்கிற பாவங்கள்தான்!
அன்பானவரே
உங்களுக்கும் புது வாழ்வு உண்டு!
உங்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது!
உங்கள் வாழ்விலும் நன்மைகள் வரும்!
உங்கள் ஆத்துமாவுக்கும் சந்தோஷம் நிச்சயமாக கிடைக்கும்!
இதுதான் உங்கள் மனதில் தோன்றுகிற அனைத்து விதமான கேள்விகளுக்கும், பதில்!
எதுபாவம்?
நம்மை உண்டாக்கிய இறைவனுக்குப் பிடிக்காத, அவரை பிரியப்படுத்தாத அனைத்துமே பாவம்தான்! ‘கொலை!’,
‘கொள்ளை!’ போன்ற பெரிய செயல்களையே, ‘பாவம்!’ என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமது உள்ளார்ந்த மனம், அதாவது நமது ஆத்துமாவிலிருந்து வெளியே தெரியாமல் நடக்கிற ‘தீய சிந்தனைகள்!’,
‘கோபதாபங்கள்!’, ‘பொறாமைகள்!’, ‘வைராக்கியங்கள்!’, ‘பகைமைகள்!’, ‘அருவருப்பான காரியங்கள்!’ போன்ற யாவுமே பாவம்தான். பரிகாரம் உண்டா? ஆம் ! நிச்சயம் உண்டு! நாம் செய்கிற எல்லா விதமான பாவங்கள், அக்கிரமச் செய்கைகள் மற்றும் பரிசுத்தமான கடவுளின் விருப்பத்துக்கு மீறி நாம் செய்கிற அசுத்தமான கிரியைகளை எல்லாம் நீக்கி, நமக்கொரு விடுதலை தந்து, ஒரு புது வாழ்வைக் கொடுக்க, நம்மை உண்டாக்கிய இறைவன் விருப்பமுள்ளவராக இருக்கிறார். நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி தூய்மையடையும் பொழுது, இறைவனின் திருக்குழந்தைகளாக நாம் மாறுவது மட்டுமல்லாமல், அவர் நமக்காக வைத்திருக்கிற பரிபூரணமா நன்மைகளையும் நாம் பெற்று அனுபவிக்க முடியும்.
உண்மையாகவா! ஆம்! உங்கள பாவங்களிலிருந்து உங்களை மீட்டு, உங்களுக்கு ஒரு புது வாழ்வைக் கொடுக்கவே, அண்ட சராசரங்களையும் உண்டாக்கி ஆள்கிற இறைவன் மனித அவதாரம் எடுத்து, ‘இயேசு கிறிஸ்து!’ என்கிற பெயரில் இந்த உலகில் தோன்றினார். ஜனங்களுக்கு நன்மைகளையும், அற்புதங்களையும் செய்து வந்த அவர், நாம் செய்த நமது பாவங்களுக்காக வாரினால் அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்தார். மூன்றாவது நாள் உயிரோடெழுந்து, என்றென்றும் ஜீவனோடு இருக்கிற நித்திய தேவனாக இருக்கிறார். அவருடைய பரிசுத்த இரத்தம் நம்முடைய சகல பாவ, சாப கர்மங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல், நமது மரணத்துக்குப் பிறகு அவர் நமக்காக வைத்திருக்கிற சொர்க்க வாழ்விற்கும் நம்மை பங்குள்ளவர்களாக்கி விடுகிறது!
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? சரியான கேள்வி! ‘ஒரு கேள்வி எழும்பினால, அதற்கு பதிலும் உண்டு!’ என்பது நிச்சயம். பின்வரும்படிகளை நீங்கள் அப்பியாசப்படுத்தினால், இறைவன் தரும் உன்னதமான விடுதலையையும், இரட்சிப்பும் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்! அதாவது, பாவ மன்னிப்பின் சந்தோசத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியம்! இதுவரைக்கும் எனக்கு இது தெரியாதே! சபாஷ்! அந்த சந்தோஷமான உன்னத பாக்கியத்தை தெரிந்து கொண்ட பின்னர் அதை பெற்றுக் கொள்ளாவிட்டால், இந்த உலகில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற நல்வாழ்வையும், மறு உலகில் இருக்கிற நித்திய வாழ்வையும் இழந்து போவது யாராக இருக்கும்? சிந்தித்துப்பாருங்கள்!
எனக்கும் ஒரு புதுவாழ்வு தேவை!
அப்படியானால், நீங்கள் செய்ய வேண்டியவை…
- ‘இயேசு கிறிஸ்துவே ஆண்டவர்!’ என்றும், உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய, சிலுவையில் அவர்
தன்னுடைய புனித இரத்தத்தைச் சிந்தினர்!” என்பதையும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும். - ‘நான் ஒரு பாவி!’ என்பதை நீங்கள் உணர்ந்து, உங்கள் தற்போதைய நிலைமையை ஒத்துக் கொண்டு, மனந்திரும்பி,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். - நீங்கள் செய்த சிறிய, பெரிய தவறுகள் மற்றும் பாவங்களை தனிமையில் உங்கள் கண்களை மூடி, அவரிடத்தில்
மனந்திறந்து சொல்லவேண்டும் . - பின்னர், ‘ இயேசு கிறிஸ்து என் இருதயத்தில் வந்து, எனக்கொரு புது வாழ்வைத் தந்து விட்டார்!’ என நீங்கள்
விசுவாசித்து, அதை உங்கள் வாயினால் அறிக்கையிட்டு, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மேற்சொல்லப்பட்ட சத்தியங்களை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
அப்படியானால், ஒரு நிமிடம் இந்தச் சிறிய பிரார்த்தனையை முழு மனதோடு செய்யுங்கள்.
அர்ப்பணிக்கிறேன்!
அன்புள்ள இயேசுவே, நான் ஒரு பாவி என்பதை உணர்ந்து, ‘நீரே உண்மையான தெய்வம்!’ என்றும், ‘என்
பாவங்களுக்காக நீர் சிலுவையில் இரத்தம் சிந்தினீர்! என்பதையும் விசுவாசிக்கிறேன்.
நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்து, என்னை உம்முடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும்படி
வேண்டுகிறேன். நீர் என் உள்ளத்தில் வந்து, என் ஆத்துமாவுக்கு சந்தோஷத்தையும், வாழ்க்கையில் நன்மைகளையும்
தந்து மகிழச் செய்ய, என்னை அர்ப்பணிக்கிறேன். இப்பொழுது நான் உம்முடைய பிள்ளை என்பதை விசுவசிக்கிறேன்.
நித்தியமான தேவனாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே! ஆமென்!
சத்திய வேத வார்த்தைகள்… தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள் 28-13 அவர் (இயேசு) தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். 1 பேதுரு 2 -24 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார். காலத்தியர் 3- 17 அவர் (இயேசு) தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்… மத்தேயு 8- 17 பரிசுத்த வேத வசனங்களை விசுவாசித்து தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது தியானம் செய்து பிரார்த்தனை ஏறெடுங்கள். உங்கள் அனைத்து விதமான பிரச்சனைகளிலிருந்து, நீங்கி சந்தோஷமாக வாழ ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களுக்கு அனுக்கிரகம் செய்வார்.