New Life To You

மரணத்திற்கு பின் நாம் எங்கு செல்வோம்

உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் ஒருநாள் மரணத்தைச் சந்தித்தேயாக வேண்டும். மரணம் ஒரு மனிதனுக்கு எந்த வயதில்? எங்கு? எப்படி? ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால், மரணம் நடைபெறப் போவது நிச்சயம். எந்த வயதிலும் மரணம் ஏற்படலாம்! எந்த இடத்திலும் சம்பவிக்கலாம்!

எந்த விதமாகவும் மரணம் சந்திக்கலாம்! உங்களையும் ஒரு நாள் மரணம் சந்திக்கப் போகிறது. எப்பொழுது என்று தெரியாது. இன்றே சந்திக்கலாம்... நாளை சந்திக்கலாம்... அல்லது நாளை மறுநாள்!... எப்பொழுது என்று திட்டமாகச் சொல்ல முடியாது. எந்தவிதமாகவும் மரணம் சம்பவிக்க லாம்! வீட்டில் இருக்கும்போது... வெளியில் நடக்கும்போது... இரவில் தூங்கும்போது... எவ்விதத்தில் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆகவேதான் மரண பயத்தோடு ஏராளமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள். இன்று மரணம் வந்து விடுமோ? இந்த தவியாதியினால் மரணம் வந்து விடுமோ? என்று பயந்து, பயந்து வேதனையோடு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் மரண பயத்திலிருந்தும், வேதனையிலிருந்தும் விடுதலை பெற வேண்டுமானால் "மரணத்திற்குப் பின் என்ன சம்பவிக்கிறது?” என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை

“மரணத்திற்குப்பின் ஒரு வாழ்க்கை உண்டு" என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இந்த உலகத்தில் கொஞ்ச நாட்கள்தான் நாம் வாழப் போகிறோம். ஆனால், மரணத்திற்குப்பின் உள்ள வாழ்க்கை நித்தியமானது (அழியாதது). ஒரு மனிதன் மரணமடைந்த பின் அவனுடைய சரீரம் புதைக்கப்படுகிறது அல்லது எரிக்கப்படுகிறது. ஆனால், அந்த சரீரத்திற்குள் இருந்த ஆத்துமா தன்னைத் தந்த தேவனிடத்தில் திரும்புகிறது. அங்கு தேவனால் நியாயந் தீர்க்கப்பட்டு மோட் சம் அல்லது நரகம் என்ற நிலைக்குள் செல்கிறது. சிலருடைய மரணத் தருவாயிலே இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு நாள் ஆஸ்பத்திரியில் வியாதிப்பட்டு சேர்க்கப்பட்டார். ஆபத்தான சூழ்நிலையில் மரணம் நெருங்கி வந்தது. அந்த நேரத்தில், தான் இருக்கிற இடத்தையும் மறந்து சத்தமிட்டுக் கதறினார். “ஐயோ! நான் இருளுக்குள் போகிறேனே! என்னை எங்கோ இருளுக்குள் அழைத்துப் போகிறார்களே! எனக்காக ஜெபியுங்கள்... என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று கதறி ஜீவனை விட்டார். எத்தனை பரிதாபம்!

மற்றொரு வாலிப சகோதரியின் மரணத்தையும் நான் அறிவேன். தன் வாலிப வயதில் பாவத்தை விட்டு மனந்திரும்பி, பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று வியாதிப் பட்டு மரணப் படுக்கையில் இருந்தாள். மரண நேரம் நெருங்கி வந்தது. தன் தாயை அருகில் அழைத்துச் சொன்னாள்: “அம்மா, நான் இன்னும் சிறிது நேரத்தில் மரித்து விடுவேன். அதோ, வானம் திறந்திருக்கிறதைப் பார்க்கிறேன். அங்கிருந்து இரண்டு தேவ தூதர்கள் என்னை நோக்கி இறங்கி வருகிறார்கள். இயேசு கிறிஸ்து அங்கே எனக்காகக் காத்திருக்கிறார். இன்னும் சில நிமிடங் களில் நான் மரித்து இயேசுவோடுகூட இருப்பேன். நான் மரித்ததும் யாரும் அழக் கூடாது. நான் சந்தோஷமாக ஆண்டவரிடம் செல்கிறேன். மகிழ்ச்சியோடு பாடல் பாடி என்னை அடக்கம் செய்ய வேண்டும்” என்று கூறி சில நிமிடங்களில் மரண மடைந்தாள். எத்தனை சந்தோஷமான மரணம்! இந்தச் சம்பங்கள் எதைக் காண்பிக் கிறது? மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பதைத் தெரியப்படுத்துகிறது. மரணத்திற்குப் பின் ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பமாகிறது. ஒன்று மோட்சத்தில், அல்லது நரகத்தில். இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கையில்லை. பாவத்தில் வாழ்கிற மனிதன், பரிசுத்த தேவன் வாசம் பண்ணும் மோட்சத்தில் பிரவேசிக்க முடியாது. தன் பாவ வழிகளை விட்டு மனந்திரும்பி, பரிசுத்த வாழ்க்கை வாழ்கிற மனிதன் மோட்சத்தில் ஆண்டவரோடு வாழ்கிறான். "பயப்படுகிறவர்களும், அவிசுவாசி களும், அருவருப்பானவர்களும், கொலை பாதகரும், விபச்சாரக்காரரும், சூனியக்காரரும், பொய்யர் விக்கிரகாராதனைக்காரரும், அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே -நரகத்திலே- பங்கடைவார்கள்" (. 21:8).

There are those who think, “God is love, gracious, He loves humanity; how could He create hell? There is nothing called hell.” God did not create hell for mankind. Hell was created for Satan and his angels. (Matt. 25:41). God who is loving will not lead people to hell. Only the sins of men will lead him into hell. You will also face death one day.

ஒன்று மோட்சத்தில் அல்லது நரகத்தில் பங்கடைய வேண்டும். பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் உங்கள் பாவமே உங்களை நரகத்துக்குள் கொண்டு செல்லும். அடிக்கடி மரண பயம் உங்கள் உள்ளத்தில் எழும்பி உங்களை பயப்படுத்திக் கொண்டே இருக்கும். உங்கள் நித்தியத்தை எங்கே கழிக்கப் போகிறீர்கள்? மோட்சத்திலா? நரகத்திலா? மரணத்திற்குப்பின் நீங்கள் தீர்மானம் எடுக்கவே முடியாது. இரண்டில் ஒன்றை நீங்கள் இவ்வுலகில் உயிரோடிருக்கும் போதே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

மரணத்திற்குப்பின் நியாயத் தீர்ப்பு

ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப் பட்டிருக்கிறது" (எபி. 9:27).

ஒரே ஒரு வாழ்க்கை,

ஒரே ஒரு மரணம்,

மரித்தபின் நியாயத்தீர்ப்பு.

மரணத்திற்குப்பின் ஒவ்வொருவரும் தேவனால் நியாயந்தீர்க்கப்படுவார்கள். ஒவ்வொரு வீணான வார்த்தை களுக்கும் நியாயத்தீர்ப்பு உண்டு. ஒவ்வொரு பாவ செய்கைகளுக்கும் நியாயத்தீர்ப்பு உண்டு. மனிதன் இவ்வுலகத்தில் இருக்கும் வரை மற்றவர்களுக்குத் தெரியாமல் தன் பாவங்களை மறைத்து, நல்லவன் போல் நடிக்கலாம். ஆனால், மரணத்திற்குப்பின் தேவனுடைய நியாயாசனத்திற்கு முன் நிற்கும்போது அவன் செய்த பாவங்கள் எல்லாம் வெளியரங்கமாகும். ஆண்டவருக்கு முன்பாக எந்த ஒரு பாவத்தையும் மறைக்க முடியாது.

ஏமாற்றியோ, பொய்யான சாட்சிகளைக் கூறியோ தேவனுடைய நியாயத் தீர்ப்பிலிருந்து யாரும் தப்ப முடியாது. பொய், ஏமாற்று, குடி, விபச்சாரம், பொய் சாட்சி, கள்ள சம்பாத்தியம், லஞ்சம், மற்றவர்களை வஞ்சித்தல், பெருமை, எரிச்சல், பண ஆசை எல்லா பாவங்களும் அன்று வெளியரங்கமாகி விடும். பாவத்திலே மனம் போல வாழ்ந்து, வெளியரங்கமாக நல்லவர்களைப் போல நடித்துக் கொண்டிருக்கிற மக்களெல்லாம் அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் தேவனுக்கு முன்பாக நடுங்குவார்கள். பாவம் செய்த ஒரு மனிதனும் தப்பித்துக் கொள்ள முடியாது. நீதியுள்ள நியாயாதிபதியாக ஆண்டவர் ஒவ்வொரு வரையும் நியாயந் தீர்ப்பார்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவருக்குத் தெரியும். ஒவ்வொருவரின் அந்தரங்க வாழ்க்கையும் அவருக்குத் தெரியும். கள்ளச் சம்பாத்தியம், பாவச் சிற்றின்பம், லஞ்சம், அநியாய லாபம், அதிகார துஷ்பிரயோகம் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். நியாத்தீர்ப்பின் நாளில் எல்லா வற்றையும் வெளியரங்கமாக்குவார். அந்நாளில் பாவியின் உள்ளம் தண்ணீரைப் போல் கரைந்து போகும். அந்த நாளில் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?

நியாயத் தீர்ப்புக்குத் தப்பித்துக் கொள்ள ஒரே வழி JUDGEMENT”

இயேசு கிறிஸ்து, ஆம்! இயேசு கிறிஸ்து மூலமாகத்தான் ஒருவன் நியாயத் தீர்ப்புக்குத் தப்பிக்க முடியும். இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் பாவத்தைப் போக்குவதற்காக உலகத்தில் வந்தார். மனுமக்களின் பாவங்களை தாமே ஏற்றுக் கொண்டு தன் பரிசுத்தமுள்ள இரத்தத்தைச் சிந்தினார். பாவத்தினால் மனுமக்களுக்கு வரக்கூடிய தண்ட னையைத் தாமே ஏற்றுக் கொண்டு, தன் பரிசுத்தமுள்ள இரத்தத்தைச் சிந்தினார். பாவத்தினால் மனுமக்களுக்கு வரக்கூடிய தண்டனையை தாமே சிலுவையில் ஏற்றுக் கொண்டு மனுமக்களுக்காக மரித்தார். இந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக் கொள்கிற யாவரும் இவர் மூலமாக பாவ மன்னிப்பின் சமாதானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, அழியாத நித்திய ஜீவனையும் பெறுகிறார்கள். இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும் போது உலகத்தில் இருக்கும் வரை சமாதானம் உள்ளத்தை நிரப்புகிறது. மரணத்திற்குப்பின் அழியாத வாழ்வையும் அவர் தருகிறார்.

இந்த இயேசுவை ஏற்றுக் கொண்டு பரிசுத்தமாய் வாழ்ந்த ஒரு மனிதன், "மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?" என்று மரணத்திற்கு சவால் விடுகிறான். மற்றொரு வாலிபன் மரணத்தைக் கண்டு பயப்படாமல், தன் மரண நேரத்தில் “கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்” என்று மகிழ்ச்சியோடு மரணத்தை சந்தித்தான்.

ஒருவன் இயேசுவை ஏற்றுக் கொண்டு, பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும்போது, மரணத்தைக் குறித்த பயம் அவனை விட்டு மாறுகிறது. மரணம் அவனுக்கு ஒரு இனிமையான அனுபவமாகிறது. மரணத்திற்குப்பின் மோட்சத்தில் ஆண்டவரோடு வாழப் போகிறோம் என்ற மகிழ்ச்சியே மேலோங்கி நிற்கிறது. காரணம்; இந்த உலகத்தில் இருக்கும் வரை பாவப் போராட்டங்கள், வியாதிகள், கவலைகள், தொல்லைகள், பிரச்சனைகள், வேதனைகள் இருக்கும். மரித்து மோட்ச ராஜ்ஜியத்திற்குள் செல்லும்போது அங்கு பாவப் போராட்டம் இல்லை, வியாதியில்லை, கண்ணீர் இல்லை, மரணமில்லை, பயமில்லை; எப்பொ ழுதும் சந்தோஷம், மகிழ்ச்சி, ஆண்ட வரோடு வாழ்கிற பாக்கியம்.

இந்த பாக்கியமான வாழ்க்கையை இயேசு கிறிஸ்து உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறார். இதை ஏற்றுக் கொள்வதும், புறக்கணிப்பதும் உங்கள் விருப்பம். ஒன்றை மறந்து விடாதீர்கள்; நீங்கள் மரிக்கும்போது ஒன்றையும் இந்த உலகத்திலிருந்து கொண்டு செல்வ தில்லை. சொத்துக்களோ! உங்கள் பணமோ! உங்கள் புகழோ! படிப்போ! வேலையோ! குடும்பமோ! உறவினர்களோ! ஒன்றும் உங்களோடு வரப் போவதில்லை. நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் எல்லாவற்றையும் செல்ல வேண்டும். விட்டுவிட்டுத்தான் தனிமையில் தான் மரணத்தை சந்திக்க வேண்டும். ஆனால், மரணத்தை தன் மரணத் தினால் ஜெயித்த இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வீர்களானால் அவர் உங்களோடு இருப்பார். மரண பயத்தை மாற்றுவார். மரித்த பின்பும் அவ ரோடு மோட்சத்தில் மகிழ்ந்திருக்கலாம். இந்த இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? "மரணத்திற்குப் பின்'' என்ற செய்தியை வாசித்த நீங்கள் இந்த இயேசுவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் எங்களுக்கு எழுதுங்கள். உங்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறோம்.

Tamil
Scroll to Top