New Life To You

நண்பனே! உன்னைக் குறித்து
பாரமுள்ள ஒருவர்...

உன் வாழ்க்கையில் சமாதானமில்லை, படிப்பிருந்தும், வேலையிருந்தும், பணம் இருந்தும் வாழ்க்கையில் சமாதான மில்லை.

பாவப் பழக்கங்களுக்கு அடிமைப் பட்டு பரிசுத்தமில்லாமல் கலங்குகிறாய். "என்னால் இந்தப் பழக்கத்தை விட முடியவில்லையே; என்னை யார் விடுவிப்பார்கள்?" என ஏங்குகிறாய். சரீர வியாதியினால் வேதனைப்பட்டு அங்கலாய்கிறாய். குடும்பப் பிரச்சனை, பல தேவைகள் மத்தியில், என்ன செய்வது? என்று சமாதானமில்லாமல் துக்கத்தோடு ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாய்.

“Is there anyone who loves me”? “Is there anyone who can change my situation”? There is someone who loves and cares for you! Yes, He is Jesus Christ! Jesus Christ loves you! He cares for you and is calling you today! Come to me, all you who are weary and burdened, and I will give you rest (Matthew 11:28) – Jesus is calling you with much love. When you come to Jesus, He will forgive your sins, deliver you from the sinful habits you are unable to let go and will give the real peace you need. He will heal your unbearable sickness. He will meet all your needs and wipe away your tears.

இந்த இயேசு கிறிஸ்து உனக்காக கல்வாரி சிலுவையில் மரித்து, தன் பரிசுத்தமுள்ள இரத்தத்தை உனக்காக சிந்தினார். மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்த இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவனோடிருக்கிறார். நீயும் இயேசு கிறிஸ்துவிடம் வரலாம். உன்னை அவர்புறக்கணிக்க மாட்டார். நண்பனே! நீ பரிசுத்தமில்லாமல், சமாதானமில்லாமல், பாடுகள், வியாதிகள், கவலைகள் மத்தியில் இருக்கிறபடியினால் இயேசு கிறிஸ்து உன் மீது அதிக பாரமுள்ளவராய் இருக்கிறார்.

உன் பாரத்தை மாற்றி சமாதானம் தர விரும்புகிறார். இன்றே நீ இயேசு கிறிஸ்துவிடம் வா! நம்பிக்கையோடு வா! அவர்உன் பாரத்தை மாற்றித் தருவார்.

Tamil
Scroll to Top