தேடி வந்தார், அற்புதம் செய்தார்!
அப்பொழுது எனக்கு வயது 14. என் இருதயம் வீங்கி, வலது கால் செயலற்றுப் போயிற்று! நான் மரணப் படுக்கையில் இருந்தேன்! சென்னை பட்டணத்திலிருந்த பல டாக்டர்களிடத்தில் என் பெற்றோர் என்னைக் கொண்டு போய் காண்பித்தார்கள்! என்றாலும், ‘‘மருத்துவத்தால் இவனை குணமாக்க முடியாது!'' என்று சொல்லி, அவர்கள் எல்லோரும் என்னை கைவிட்டு விட்டார்கள்!
மரணத்திற்கும், எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரமே இருந்தது! கைவிடப்பட்ட நிலைமையில் நான் சாகக் கிடந்தபோது, ‘ஒருவர்' என்னைத் தேடி வந்தார்! அவர் என்னைத் தொட்டார்! எனக்கு அற்புதமான சுகத்தைக் கொடுத்தார்! அந்த அற்புதமானவரை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கிற ஒரு அழகிய கிராமம்தான் நாலுமாவடி! அங்குதான் 19541954ம் ஆண்டு பக்தியுள்ள ஒரு குடும்பத்தில் நான் பிறந்தேன். சிறு வயது முதலே தெய்வ பக்தியில் வளர்க்கப்பட்டேன். நான் சிறுவனாக இருந்தபோது, என் பாட்டி, ‘இராமாயணம்', ‘மகாபாரதம்' கதைகளை தினந்தோறும் எனக்கு சொல்லிக் கொடுப்பார்கள். ஆகவே, ‘‘தெய்வத்தைப் பார்க்க வேண்டும்! தெய்வத்தோடு பேச வேண்டும்!'' என்கிற ஒரு வாஞ்சை சிறு வயது முதலே எனக்குள் காணப்பட்டது.
எங்கள் வீட்டிலிருந்த பூஜை அறைக்குள், தினமும் காலையும், மாலையும் ‘தெய்வ வழிபாடு' செய்வேன். என் தகப்பனார், வியாபாரத்தின் நிமித்தமாக சென்னை பட்டணத்திற்குப் போய் விட்டார்கள். ஆகவே, நாங்கள் குடும்பமாக சென்னையில் உள்ள ‘பாடி' என்கிற ஒரு இடத்தில் குடியேறினோம். சென்னைக்கு வந்தும், என் தெய்வ பக்தி குறையவில்லை. தினமும் காலையில் ‘தெய்வ வழிபாடு' செய்து, நெற்றியில் ‘சந்தனப் பொட்டு' வைத்துக் கொண்டுதான் பள்ளிக் கூடத்திற்குச் செல்வேன். அந்தப் பள்ளிக் கூடத்திலிருந்த ஒரு ஆசிரியர், ‘‘ஏய்...சந்தனப் பொட்டு!'' என்றுதான் என்னை அழைப்பார்.
அந்த நாட்களில் சிலர் என்னிடத்தில் வந்து, இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சொன்னார்கள். அப்பொழுதெல்லாம், ‘‘இயேசு கிறிஸ்து தெய்வமே அல்ல!'' என்று சொல்லி, அவர்களிடத்தில் வாதாடினேன். ‘‘காந்தியைப்போல, நேருவைப்போல, அவரும் ஒரு மனிதர்தான்! அவர் வந்தார், சில நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்தார், மரித்துப் போனார், அவ்வளவுதான்!'' என்று சொல்லி வாக்குவாதம் பண்ணினேன்.
இன்னும் இயேசு கிறிஸ்துவைக் குறித்து என்னிடத்தில் அவர்கள் சொன்னபோது, அவரைக் குறித்து மிகவும் கேவலமாகப் பேச ஆரம்பித்தேன். இந்தப் புத்தகத்தில் எழுதக் கூடாத அளவுக்கு இயேசு கிறிஸ்துவைக் குறித்து மிகவும் கேவலமாகப் பேசி, அவரைப் பரிகாசம் செய்தேன். அந்த அளவுக்கு மத வைராக்கியமும், தெய்வ பக்தியும் எனக்குள் இருந்தது.
அப்பொழுது எனக்கு 14 வயது. சென்னை-வில்லிவாக்கத்திலிருந்த சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில்தான் நான் 99ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், திடீரென்று ஒரு வியாதி என்னைத் தாக்கியது! என் இருதயம் பாதிக்கப்பட்டது! என் வலது கால் செயலற்றுப் போனது! என் பெற்றோர் என்னை டாக்டர்களிடத்தில் கொண்டு போனார்கள். ‘என்ன வியாதி?' என்றே அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. மருந்து-மாத்திரைகளை மட்டும் எனக்கு மாற்றி மாற்றிக் கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் வியாதி அதிகமானதே அல்லாமல், சுகமாகவில்லை.
என் பெற்றோர் எனக்காக ஏராளமான பணத்தைச் செலவழித்து, பல டாக்டர்களிடத்தில் என்னைக் கொண்டு போய் காண்பித்தார்கள். ஆயிரக்கணக்கான மாத்திரைகளை நான் விழுங்கினேன்! ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எனக்கு மாத்திரைகளைக் கொடுத்தார்கள்! என்றாலும், வியாதி அதிகரித்ததே அல்லாமல், சுகமாகவில்லை.
என் இருதயம் வீங்கி விட்டது! வலது கால் முற்றிலுமாக செயலற்றுப் போயிற்று! வியாதியின் அகோரத்தினால் மெலிந்து, எலும்பும், தோலுமாகிப் போனேன்! என் இருதயம் வீங்கியிருப்பதை வெளியில் இருந்தே பார்க்க முடியும். அந்த அளவிற்கு என் இருதயம் பாதிக்கப்பட்டு விட்டது!
சோர்ந்து போயிருந்த அந்த சமயத்தில், ‘‘வெளி நாட்டில் படித்த ஒரு டாக்டர் வந்திருக்கிறார். அவரிடத்தில் காண்பிக்கலாம்.'' என்று, என் உறவினர் ஒருவர் தகவல் சொல்லி அனுப்பினார். ஆகவே என் பெற்றோர், அவரிடத்திலும் என்னை தூக்கிக் கொண்டு போய் காண்பித்தார்கள்.
சென்னையில் ‘அயனாவரம்' என்கிற இடத்திலிருந்த அந்த டாக்டர், என்னை மிகுந்த அன்போடு கவனித்தார். அவரும், அவரோடு கூட இன்னும் சில டாக்டர்களுமாக பல மணி நேரங்கள் என்னை பரிசோதித்துப் பார்த்து விட்டு, கலந்து ஆலோசித்தார்கள். கடைசியில், ‘‘உங்கள் மகனுடைய இருதயம் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுப் போய் விட்டது! இனி மருத்துவத்தால் உங்கள் மகனை குணமாக்க முடியாது!'' என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
மருத்துவம் என்னைக் கைவிட்டபடியினால், என் பெற்றோர் எனக்காக தெய்வத்தை நோக்கிப் பார்க்க ஆரம்பித்தார்கள். ‘‘எப்படியாவது மகன் சுகமாக வேண்டுமே!'' என்று, யார் யார் எந்தெந்த தெய்வத்தைக் குறித்துச் சொன்னார்களோ, அவைகளுக்கெல்லாம் பொருத்தனைகளையும், காணிக்கைகளையும் செலுத்தினார்கள். அவைகளில் எதுவுமே எங்கள் கூப்பிடுதலுக்குப் பதில் கொடுக்கவில்லை. இந்நிலையில் வியாதி இன்னும் அதிகமாகி, மரணப் படுக்கையிலானேன். என் வலது காலை அசைக்கவே முடியாது. நான் எழுந்து உட்கார வேண்டுமானால், யாராவது ஒருவர் வந்து, எனக்கு உதவி செய்ய வேண்டும். நான் மறுபடியும் படுக்க வேண்டுமானால், ஒருவர் வந்து எனக்கு உதவி செய்ய வேண்டும்.
பசி எடுக்கும்! தாகம் எடுக்கும்! ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட என் நாவில் வைக்க முடியாது! பயங்கரமாக கசக்கும்! எங்கள் உறவினர்களும், நண்பர்களும் என்னை வந்து பார்த்து விட்டு, ‘‘இனி இவன் எங்கே நடக்கப் போகிறான்? சாகும்வரை இந்தப் படுக்கைதான்! இனி இவன் எங்கே பிழைக்கப் போகிறான்! மரித்தாலும் மரித்து விடுவான்!'' என்று சொல்லி விட்டுப் போவார்கள்.
இப்படியாக நான் கைவிடப்பட்ட நிலைமையில், மரணப் படுக்கையிலிருந்த போதுதான், ‘ஒருவர்' என்னைத் தேடி வந்தார். அதாவது, நான் யாரை வெறுத்தேனோ, அந்த இயேசு கிறிஸ்து என்னைத் தேடி வந்தார்! நான் யாரை ‘தெய்வம் அல்ல!' என்று சொல்லி வாதாடினேனோ, அந்த இயேசு கிறிஸ்து என்னைத் தேடி வந்தார்! நான் யாரைப் பரிகாசம் பண்ணினேனோ, அந்த இயேசு கிறிஸ்து என்னைத் தேடி வந்தார்! நான் அவரைத் தேடிப் போகவில்லை. ஆனால், அவர்தான் என்னைத் தேடி வந்தார்!
அந்த சமயத்தில், நான் வியாதிப்பட்டு இருந்ததைக் கேள்விப்பட்ட ஒரு கிறிஸ்தவ சகோதரன் என்னைப் பார்த்து விசாரித்து விட்டுப் போக வந்தார். அவர் எங்கள் குடும்ப நண்பர். அப்பொழுது என் தாயார் அந்த சகோதரனிடத்தில், ‘‘என் மகனை எல்லோரும் கைவிட்டு விட்டார்கள்! என் மகனுக்காக இயேசுவினிடத்தில் ஜெபம் செய்வாயா?'' என்று கண்ணீரோடு கேட்டுக் கொண்டார்கள். என் தாயாருடைய கண்ணீரைக் கண்ட அந்த சகோதரன், ‘‘உங்கள் மகனுக்காக நான் இயேசுவினிடத்தில் விண்ணப்பம் செய்கிறேன்...'' என்று சொல்லி, என் படுக்கையின் அருகில் வந்து முழங்கால்படியிட்டார். அவரோடு கூட என் பெற்றோரும், என் 3 சகோதரர்களும் முழங்கால்படியிட்டார்கள்.
அந்த சகோதரன் எனக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் கூட நான் இயேசு கிறிஸ்துவை ஒரு தெய்வமாகவே நம்பவில்லை. அவரை நோக்கி நான் கூப்பிடவும் இல்லை. என் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு, அவர் ஜெபம் பண்ணுவதை சும்மா வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அளவிற்கு நான் இயேசு கிறிஸ்துவை வெறுத்தேன்.
அந்த சகோதரன் எனக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த அறைக்குள் தேவ பிரசன்னம் இறங்க ஆரம்பித்தது! ஒரு தெய்வீக வல்லமை அந்த அறைக்குள் இறங்குவதை நான் உணர ஆரம்பித்தேன்! யாரோ ஒருவர் அந்த அறைக்குள் இருந்த என் படுக்கையின் அருகில் வருவதை என்னால் நன்றாக உணர முடிந்தது!
என் மாம்சக் கண்களால் பார்க்க முடியவில்லை! ஆனால், அந்த தெய்வீக வல்லமையை என் சரீரத்தில் என்னால் உணர முடிந்தது. திடீரென்று ஒரு கரம் என்னைத் தொட்டது! அப்போது மின்சாரத்தைப் போன்ற ஒரு வல்லமை என் சரீரத்தில் இறங்கியதை உணர்ந்தேன். அந்த தெய்வீக வல்லமை, செயலற்றுப் போய் கிடந்த என் வலது காலின் வழியாகப் பாய்ந்து சென்றது.
அந்த சகோதரன் இன்னும் எனக்காக ஜெபித்துக் கொண்டே இருந்தார். அவர் ஜெபித்து முடிப்பதற்குள்ளாகவே, கொஞ்சம் கூட காலை அசைக்க முடியாமல் அந்தப் படுக்கையில் படுத்திருந்த நான், தானாகவே எழுந்து உட்கார்ந்து விட்டேன்! ‘‘என் கால் செயல்படுகிறது! நான் சுகமாகி விட்டேன்! இயேசு கிறிஸ்து என்னை சுகமாக்கி விட்டார்!'' என்கிற சந்தோஷத்தில், என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்தது. ‘‘இயேசு கிறிஸ்துதான் மெய்யான தெய்வம்!'' என்று, அப்பொழுது என் இருதயத்தில் விசுவாசித்தேன்.
அந்த சகோதரன் ஜெபித்து முடித்தார். நான் படுக்கையை விட்டு இறங்கி, நடக்க ஆரம்பித்து விட்டேன்! ஆம்! நொண்டியாகக் கிடந்த என்னை, இயேசு கிறிஸ்து நடக்கப் பண்ணினார்! என் வலது காலுக்கும், இடது காலுக்கும் ஒரு சிறு வித்தியாசம் கூட இல்லாத அளவிற்கு பரிபூரணமாக என்னை சுகமாக்கினார்!
என் காலை மாத்திரமல்ல, வீங்கிப் போயிருந்த என் இருதயத்தையும் அப்பொழுதே இயேசு கிறிஸ்து சுகமாக்கினார்! ஒரே சமயத்தில் 22 அற்புதங்கள்! அதன் பிறகு, என் பெற்றோர் எந்த டாக்டர்களிடத்திலும் என்னைக் கொண்டு போகவில்லை.
56 வருடங்களுக்கும் மேலாக ஒரு சிறு பிரச்சனை கூட இல்லாதபடி, என் இருதயம் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் என்ன? இயேசு கிறிஸ்து எனக்கு ஒரு புதிய இருதயத்தைக் கொடுத்து விட்டார்! பாதிக்கப்பட்டிருந்தஎன்பழையஇருதயத்தைமாற்றி, ஆரோக்கியமானஒருபுதுஇருதயத்தைஎனக்குகொடுத்துவிட்டார்! கத்தியில்லாமல், இரத்தம்சிந்தாமல், ஒருநொடிப்பொழுதில்இயேசுகிறிஸ்துஎனக்குஇருதயமாற்றுஆபரேஷன்செய்துவிட்டார்! நான்இன்றைக்குஉயிரோடுஇருப்பதற்குக்காரணம், இயேசுகிறிஸ்துஒருவரே! அவர்என்னைத்தேடிவராமல்இருந்திருந்தால், இன்றைக்குஎன்கல்லறைதான்இந்தபூமியில்இருந்திருக்கும்!
அவர்என்னைத்தேடிவந்து, எனக்குச்செய்தஇந்தஅற்புதத்தைநான்நினைக்கும்போதெல்லாம், அவருடையபாதபடியில்நன்றிக்கண்ணீர்வடிக்கிறேன். அவர்எனக்குக்காண்பித்தஅன்பைஇன்றைக்குவரைக்கும்என்னால்விளங்கிக்கொள்ளவேமுடியவில்லை அவரைமிகக்கேவலமாக, பரிகாசமாகப்பேசியஎன்னைபழிவாங்காதபடி, அன்போடுஎன்னைத்தேடிவந்து, என்மரணப்படுக்கையைமாற்றினாரே! அந்தஅன்பு, கிரகிக்கவேமுடியாதமிகவும்ஆச்சரியமானஅன்பு
அந்தஅன்பின்நேசராகியஇயேசுகிறிஸ்து, இன்றைக்குஉங்களைத்தேடிவந்திருக்கிறார். இதோ, இந்தப்புத்தகத்தின்மூலமாகஉங்களைசந்தித்துக்கொண்டிருக்கிறார். உங்களுக்குஇன்றைக்குஒருஅற்புதத்தைச்செய்வார்!
இன்றைக்குஉங்களுக்குஒருஅற்புதம்தேவை! உங்கள்வியாதிமாற, பிரச்சனைகள்தீர, தேவைகள்சந்திக்கப்பட, பயங்கள்நீங்க, உங்களுக்குஒருஅற்புதம்தேவை!
உங்களுக்குஅற்புதம்செய்வதற்காகவே, இயேசுகிறிஸ்துஉங்களைத்தேடிவந்திருக்கிறார். ஆகவே, கலங்காதீர்கள்! இயேசுகிறிஸ்துஉங்களைநேசிக்கிறார்! நீங்கள்அவரைவெறுத்தால்கூட, அவர்உங்களைநேசிக்கிறார்!
அவருடையஅன்பைவிசுவாசியுங்கள்! அவருடையவல்லமையைவிசுவாசியுங்கள்!
விசுவாசத்தோடுஇயேசுகிறிஸ்துவைநோக்கிப்பாருங்கள். அவரிடத்திலிருந்துநீங்களும்அற்புதங்களைப்பெற்றுக்கொள்வீர்கள்!
…………………………………………………………………………………………………………………………………………