உங்கள் வாழ்வில் சமாதானம் வேண்டுமா
ஒரு மனோதத்துவ மருத்துவரிடத்தில ஒரு மனிதன் வந்தான். சந்தோஷமோ, "என் உள்ளத்திலே சமாதானமோ....
மருத்துவர் அவனிடம்; "நமது பட்டணத்தில் ஒரு சர்க்கஸ் நடைபெறுகிறது; அதில் ஒரு கோமாளி வந்து, எல்லோரையும் சிரிக்க வைக்கிறான். அவனைப் பார்த்து, அவன் பேசுவதைக் கேட்டு சிரிக்காதவர்களே இல்லை. நீயும் அங்கு செல், சில மணி நேரம் உன் கவலையை மறந்து சந்தோஷமாய் இருக்கலாம்" என்று ஆலோசனை கூறினார்.
வந்திருந்த மனிதன் சொன்னான்; "நான்தான் அந்தக் கோமாளி. ஆயிரமாயிரமான மக்களை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்துகிற அந்தக் கோமாளி நான்தான். மற்றவர்களுக்கு முன்பாக சந்தோஷமாக நடித்து அவர்களைச் சிரிக்க வைக்கிறேன், என் உள்ளத்திலோ சமாதானமற்ற நிலை" என்று கூறின போது மருத்துவர் செய்வதறியாது திகைத்தார்.
இன்று உங்கள் நிலையும் இதுதான். வெளியில் சந்தோஷமாயிருப்பது போலக் காண்பிக்கிறீர்கள்; உங்கள் உள்ளத்திலோ சந்தோஷமில்லை. உங்கள் நண்பருக்கு மத்தியில், உறவினர்களுக்கு மத்தியில் நீங்கள் மிகுந்த சந்தோஷமாய் வாழ்வது போல நடிக்கிறீர்கள். உங்கள் உள்ளத்திலோ சமாதானமில்லை. மற்றவர்களுக்கு நன்மை செய்து அவர்களை சந்தோஷப் படுத்துகிறீர்கள்; உங்கள் உள்ளத்திலோ நிலையான சமாதானமில்லை.
மற்றவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது, உங்கள் படிப்பைக் குறித்து, பதவியைக் குறித்து, செல்வாக்கைக் குறித்து, சம்பாத்தியத்தைக் குறித்து ஒரு சந்தோஷம் உள்ளத்தில் வருகிறது. கொஞ்ச நேரம்தான்; அந்த சந்தோஷம் நிலையாய் இருக்க வில்லை. தனிமையில், உங்கள் உள்ளத்தில் வெறுமை, திருப்தியற்ற நிலை, நிம்மதியான உறக்கமில்லை, குழப்பமான வாழ்க்கை.
சமாதானமில்லை...
உள்ளத்திலே சமாதானமில்லை..
சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள என்ன செய்வது?
கண்கள் இச்சித்தபடியெல்லாம் நடந்தாயிற்று மனதும், மாமிசம் விரும்பினதையெல்லாம் அனுபவித் தாயிற்று; உலகிலுள்ள சிற்றின்பங்களையெல்லாம் ; ருசித்தாயிற்று... ஆனாலும், சமாதானமில்லை.... எதிலும் பூரண சந்தோஷமில்லை...
ஏன் சமாதானமில்லை?
"துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லை" என்று என் தேவன் சொல்லுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பாக “விஷ ஊசி வழக்கு" என்ற ஒரு வழக்கு சென்னை நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அதனுடைய காரணம் இதுதான்.
நான்கு ஐந்து நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து சென்னைக்குப் பல லட்சம் ரூபாய்களோடு வியாபாரத்திற்காக வரக் கூடிய வியாபாரிகளைக் கொள்ளையடிக்கத் தீர்மானித்தார்கள். அவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் (Lodge) அரசாங்க அதிகாரியைப் போல நுழைவார்கள். "இந்தப் பணத்திற்குக் கணக்கு என்ன?" என்று கேட்பார்கள். அவர்கள் உண்மையைச் சொன்னாலும், நம்பாதவர்களைப் போல நடித்து அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக காரில் கூட்டிச் செல்வார்கள். உண்மையை வரவழைக்க ஒரு ஊசி மருந்தைச் செலுத்துவதாகக் கூறி ஊசியின் மூலம் விஷத்தைச் செலுத்திவிடுவார்கள். அவர் மரித்ததும், பட்டணத்திற்கு வெளியில் காட்டுப் பகுதியில் பிணத்தை எரித்து விட்டு லட்சக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளை யடித்துக் கொள்வார்கள்.
சிலர், இவர்கள் தன் பணத்திற்காகத்தான் தன்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள் என்று தன் உயிருக்காக மன்றாடியிருக் கிறார்கள். "என் பணத்தை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். என்னை விட்டு விடுங்கள்.
வீட்டிலே என் மனைவி, பிள்ளைகள் உண்டு" என்று கதறியிருக் கிறார்கள். ஆனாலும், இரக்கமற்ற நிலையில் கொலை செய்தார்கள்.
லட்சம் லட்சமாகப் பணம் கிடைத்தது. பங்கு வைத்துக் கொண்டார்கள். அடுத்தவர்களைக் கொள்ளையடித்தே லட்சாதிபதி ஆகிவிட்டார்கள். காவல் துறையினரால் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சில மாதங்கள் கடந்தது; இந்தக் கொலை, கொள்ளையில் முக்கியப் பங்கு வகித்த, அதிகமாக லாபம் சம்பாதித்த ஒருவர் போலீசில் வந்து நடந்த எல்லாவற்றையும் கூறி உண்மையை ஒத்துக் கொண்டார்.
அவருடைய உதவியினால் சம்பந்தப்பட்ட யாவரும் கைது செய்யப்பட்டார்கள். நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்ரூவர் ஆன மனிதர் எல்லா உண்மைகளையும் நீதி மன்றத்தில் தெரிவித்தார்.
நீதிபதி அவரிடம் ஒரு கேள்வி கேட்டார், “உங்களைத்தான் ஒருவரும் சந்தேகப்பட வில்லையே, பின் ஏன் நீங்களாகவே வந்து குற்றத்தை ஒத்துக் கொண்டீர்கள்?"
இதற்கு அந்த மனிதன் சொன்ன பதில் ஆச்சரியமானது: கொலை செய்து, கொள்ளை யடித்து லட்சாதிபதியாக மாறினான். பெரிய பங்களாவை வாங்கி வசதியான வாழ்க்கை அமைத்துக் கொண்டான். காரை வாங்கி உல்லாசமாகப் பவனி வந்தான். இனி மகிழ்ச்சியான வாழ்க்கைதான் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.
ஆனால், இரவு படுக்கைக்கு செல்லும் போது அவனால் உறங்க முடியவில்லை. படுக்கையில் கண்ணை மூடினால், அவன் கொலை செய்த மனிதர்களின் முகங்கள் முன்னால் வந்து நிற்பதைப் போல் இருக்கும். என்னை ஒன்றும் செய்யாதீர்கள், எனக்கு மனைவி, பிள்ளைகள் உண்டு, என் பணத்தை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று உயிருக்காக அவர்கள் கதறிய கதறுதல்கள் அவன் காதில் தொனிக்கும். இரவு முழுவதும் உறக்க மில்லாமல் பயத்திலும், குழப்பத்திலும் நாட்கள் கடந்தது.
புண்ணிய ஸ்தலங்கள் என்று கருதப்படும் இடங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் இந்தப் பாவம் மாறிவிடும் என்று பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பூஜைகளைச் செய்தான். ஆனாலும் சமாதானத்தைக் காணவில்லை.
ஏழைகளுக்குத் தான தருமங்களைச் செய்தால் தன் பாவம் மறக்கப்பட்டு விடும் என்று தர்மங்களைச் செய்து பார்த்தான். மனதிலே சாந்தி கிடைக்கவில்லை. அவன் செய்த கொலையும், கொள்ளையும் அவன் மனதை வாதித்துக் கொண்டேயிருந்தது. அவனால் அந்தக் காட்சிகளை மறக்கவே முடியவில்லை.
ஒவ்வொரு நாளும் தனிமையில் நரக வேதனையை அனுபவித்தான். யாரிடத் திலும் சொல்ல முடியாத நிலை. கடைசியில் தன் தவறை ஒத்துக் கொண்டால்தான் தனக்கு சமாதானம் உண்டாகும் என்ற நிலையில் அவனாகவே வந்து தவறை ஒத்துக் கொண்டான்.
ஆம்! என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது என்று பாவம் செய்த மனிதன் கதறுகிறான். ஒருவனுடைய பாவமே அவனது மனச்சாட்சியில் குற்ற உணர்வை கொடுத்து அவன் சமாதானத்தைக் கெடுத்து விடுகிறது.
கொலை செய்வதும், கொள்ளையடிப் பதும்தான் பாவம் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல; பொல்லாத சிந்தனை, விபச்சாரம், வேசித்தனம், கொலை, களவு, பொருளாசை, துஷ்டத்தனம், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு இவைகள் மனுஷனுடைய உள்ளத்திலிருந்து புறப்பட்டு அவனை தீட்டுப்படுத்தும்.
கண்களில் இச்சைகள், மாம்சத்தின் இச்சைகள், குடிவெறி, பண ஆசை, மற்றவர்களை வஞ்சித்தல், ஏமாற்றுதல், லஞ்சம் இவையெல்லாம் ஒரு மனிதனைப் பரிசுத்தமுள்ள தேவனைவிட்டு பிரித்து விடுகிறது. ஆகவே, தன் உள்ளத்தில் சமாதானத்தை இழந்து தவிக்கிறான்.
இன்று உங்கள் நிலைமை என்ன?
ஆரம்பத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் பாவச் சிற்றின்பங்களும், மாம்ச இச்சைகளும் நாட்கள் செல்லச் செல்ல மனிதனை அடிமைப்படுத்தி விடுகிறது. அவர்கள் விட்டு விட விரும்பியும் அந்த பாவப் பழக்கத்தை விட முடியாமல் தவிக்கிறார்கள். பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமையாயிருக்கிறான்.
பாவத்தினாலும், பாவ பழக்கங்களி னாலும் ஏற்படும் சமாதானக் குறைவு ஒரு பக்கம்; தன் பாவக் காரியங்கள் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயம்.
யார் என்னை இந்தப் பாவத்திலிருந்து விடுதலையாக்குவார்? மன்னிக்கப்படுமா? என் பாவம் பாவத்திலிருந்து விடுதலை கிடைக்குமா? நானும் சமாதா னத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
இவ்விதமாய் கலங்கி கொண்டிருக் கிறீர்களா?
உங்களுக்கு ஒரு நற்செய்தி:
பாவ மன்னிப்பை பெறலாம்.
பாவ மன்னிப்பை பெறலாம்.
தெய்வீக சமாதானத்தைப் பெறலாம்.
சமாதானத்திற்கு வழி!!
பாவத்தினால் சமாதானத்தை இழந்து தவித்த மனுக்குலத்தின் மீது வைத்த அன்பினால் இவ்வுலகத்தை சிருஷ்டித்த தேவன் மனிதனாய் உலகத்தில் வந்தார்.
"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர் களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28).
நீங்கள் எவ்வளவு பெரிய பாவத்தில் அகப்பட்டிருந்தாலும், பாவப் பழக்கங்க ளிலிருந்தாலும் அவர் உங்களை ஏற்றுக் கொள்வார். பாவி என்று புறம்பே தள்ள மாட்டார். நீங்கள் தைரியமாக இயேசு வண்டை வரலாம். அவரிடத்தில் உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டு.
இந்த இயேசுவைத் தேடி நீங்கள் வேறு எங்கும் செல்ல வேண்டாம் அவர் எங்கும் இருக்கிறார். நீங்கள் இருக்கிற இடத்தி லேயே அவரை ஏற்றுக் கொள்ளலாம். இயேசு கிறிஸ்துவண்டை வந்து பாவ மன்னிப்பை பெற்றுக் கொள்வதற்கு நீங்கள் பணம் செலவு அவசியமில்லை. பண்ண வேண்டிய இலவசமாகப் பாவ மன்னிப்பை இயேசு அளிக்கிறார். காரணம்; உங்கள் பாவத்திற்காக அவர் மரித்தார்.
சமாதானப் பிரபுவாக வந்த இயேசு கிறிஸ்து, மனிதனுக்குப் பாவ மன்னிப்பை, சமாதானத்தை கொடுக்க சிலுவையில் மரித்தார். சிலுவை மரத்தில் கைகளிலும், கால்களிலும் ஆணி அடிக்கப்பட்டு தன் பரிசுத்தமுள்ள இரத்தத்தைச் சிந்தினார்.
"இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது" என்பதை இந்து வேதங்களும் ஒத்துக் கொள்கிறது. "இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்."
“இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின தன்னுடைய இரத்தத்தினால் சமாதானத்தை உண்டாக்கினார்." காரணம்; "இயேசு கிறிஸ்து தாமே நம்முடைய பாவங்களைத் தம்முடைய சரீரத்தில் சிலுவையின் மேல் சுமந்தார். நம்முடைய அக்கிரமங்கள் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது."
ஆம், உங்களுக்காக, நீங்கள் செய்த பாவத்திற்காக இயேசு சிலுவையில் தண்டனையை ஏற்றுக் கொண்டார். உங்கள் பாவங்களை மன்னிக்க, அவர் சிலுவையில் உங்களுக்காக இரத்தம் சிந்தினார்.
உங்கள் பாவம் மன்னிக்கப்பட, மெய்யான சமாதானத்தைப் பெற இயேசு கிறிஸ்து அல்லாமல் வேறு வழியில்லை.
மனிதன் தன் தெய்வ பக்தியினாலோ, தான தர்மங்களினாலோ பாவ மன்னிப்பை, சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பாவ மன்னிப்பையும், மெய் சமாதானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
நீங்கள் பாவி என்பதை ஒத்துக் கொண்டு, உங்கள் பாவத்தை இயேசுவிடம் அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவை ஆண்டவரும், இரட்சகருமாக உங்கள் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்"
இயேசு கிறிஸ்து உங்கள் பொன்னையோ, பொருளையோ கேட்கவில்லை; உங்களை ஒரு புதிய மதத்தில் சேரும்படி அழைக்கவில்லை. அவருக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுக்க வேண்டும்.
இயேசு உங்கள் உள்ளத்தில் வரும்போது, உங்கள் பாவங்களை மன்னித்து, மெய்யான தெய்வீக சமாதா னத்தைத் தருவார்; பரிசுத்த வாழ்க்கையைத் தருவார். உங்கள் வாழ்க்கையே சந்தோஷ மான வாழ்க்கையாய் மாறிவிடும்.
இந்த மெய்யான தெய்வீக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் முழு இருதயத்தோடும் இப்படி ஜெபியுங்கள்:
இயேசுவே! நீரே மெய்யான தெய்வமென்று நான் விசுவாசிக்கிறேன்!
நீர் எனக்காக, என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தீர் என்று விசுவாசிக்கிறேன்!
நான் ஒரு பாவி என்று உணர்கிறேன், என் பாவங்களை மன்னியும்!
உம்மை என்னுடைய ஆண்டவராக, இரட்சகராக என் உள்ளத்தில் ஏற்றுக் கொள்கிறேன்
பாவ மன்னிப்பின் சமாதானத்தை எனக்குத் தாரும்!
இன்று முதல் நீரே என் ஆண்டவர்...
என் இரட்சகர்... ஆமென்.